பேரவையை மதிக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் - அமைச்சர் துரைமுருகன் அதிருப்தி

Update: 2025-01-09 14:30 GMT

சட்டப்பேரவையில் ஐஏஎஸ் அதிகாரிகள் யாரும் இல்லாததால், அவை முன்னவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கடும் அதிருப்தி தெரிவித்தார். ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில், குறுக்கிட்டு பேசிய அவை முன்னவர் துரைமுருகன், துறை சார்ந்த அதிகாரிகள், ஏன் இல்லை என கேள்வி எழுப்பினார். அதிகாரிகளுக்கு அவர்களுக்கான இருக்கையில் இருக்க வேண்டும், அவைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கூறினார். துரைமுருகன் அறிவுறுத்தி 15 நிமிடங்கள் கடந்தும், அதிகாரிகள் யாரும் வராததை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி. உதயகுமார் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய பேரவைத்தலைவர் அப்பாவு, நாளை முதல், அவையில் அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது, துறை சார்ந்த அதிகாரிகள் அவையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்