திமுக பொதுக்கூட்டத்தில் எதிர்ப்பு முழக்கம் எழுப்பிய பாமக பிரமுகர்

Update: 2025-03-24 01:52 GMT

செய்யாறு அருகே திமுக பொதுக்கூட்டத்தில், ஆரணி எம்பி பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக பிரமுகர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஆரணி எம்பி தரணிவேந்தன் பேசிக்கொண்டிருந்தபோது, பாமகவை சேர்ந்த பாலாஜி என்பவர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினார். அவரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். இதனை அறிந்த பாமகவினர் செய்யாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. பின்னர் முழக்கம் எழுப்பிய பாமக பிரமுகரை போலீசார் விடுவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்