"முதல்வர் என்னை பேசியது மிகுந்த வலியை ஏற்படுத்தியது" - வேல்முருகன் பேச்சு | Velmurugan
சட்டமன்றத்தில் தனது நடவடிக்கை குறித்து முதல்வர் பேசியது மனத்திற்கு மிகுந்த வலியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சட்டப் பேரவையில் கோரிக்கை விடுத்தபோதும், முந்தைய அதிமுக ஆட்சியை விமர்சித்தபோதும் அமைச்சர் சேகர் பாபு கோபமடைந்து பேசியதாக தெரிவித்தார். பேரவையில் தன்னைப் பற்றி முதல்வர் பேசியது மிகுந்த வலியை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.