
சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மதுபான கடையில் பாஜகவினர் முதல்வரின் போட்டோவை ஒட்டுவதாக வந்த தகவலை தொடர்ந்து, திமுகவினர் அண்ணாமலை சவுக்கால் அடித்துக் கொள்வது போன்ற படத்தை எடுத்து வந்து ஒட்ட வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே திமுகவினரை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.