ராணிப்பேட்டை மாவட்ட விளையாட்டு வளாகத்தின் கட்டுமான பணிகளை, கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி சேலை
பணிகள், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தாமதாமகி உள்ளதாக கூறினார். கடந்த ஆண்டு டிசம்பர் 31க்குள் அனைத்து வேட்டி சேலைகளும் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜனவரி 15ஆம்
தேதிக்குள் அனைவருக்கும் இலவச வேட்டி சாலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பொங்கல் பண்டிகைக்குள் அனைவருக்கும் வேட்டி சேலை வழங்க பணிகள்
முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.