"நேரு வழியில் முதல்வர் ஸ்டாலின்..!" - புகழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் | MK Stalin
அரசுப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்கள் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், பிரான்ஸ், தென்கொரியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா,சென்னை சாந்தோம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர்,சிறந்த பள்ளிகளுக்கான கேடயங்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், மறைந்த பிரதமர் நேரு எப்படி மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச்சென்றாரே, அது போல், சிறந்து விளங்கும் அரசு பள்ளி மாணவர்களை, முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாடு அழைத்துச்செல்வதாக கூறினார்.