ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்..! முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார் | MK Stalin

Update: 2024-11-14 13:22 GMT

தமிழகத்தில், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கவும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து அளிக்கவும் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் கடந்த 2022-ம் ஆண்டுதொடங்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில், சுமார் 75 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். அக்குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், அக்குழந்தைகளின் தாயார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் வகையிலும் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி,

22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார். மேலும்,

ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆட்சியருடன் இணைந்து இத்திட்டத்தை துவக்கி வைத்து, ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குமாறு அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்