"என்னை சீண்டினால்... விளைவுகளை பாஜகவால் தாங்க முடியாது" - சித்தராமையா கடும் வார்னிங்
மைசூருவில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, தனது உரையில் பாஜகவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். என்னை சீண்டினால் அமைதியாக இருக்க மாட்டேன் என்றும், அதனால் வரும் விளைவுகளை உங்களால் தாங்க முடியாது என பாஜகவினருக்கு எச்சரிக்கை விடுத்தார். தனது ஆட்சியை கவிழ்ப்பதற்காக எம்எல்ஏக்களிடம் 50 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்டதாகவும், ஆனால் எந்த எம் எல் ஏவும் பாஜகவின் பக்கம் செல்ல தயாராக இல்லை
என்று கூறினார். மூடா விவகாரத்தில் தன்னை நுழைத்து, அதன் மூலம் ஆட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என பாஜகவினர் எண்ணுகிறார்கள் என்றும், ஆனால் தன்னை சீண்டினால் தானும்
தனது மக்களும் அமைதியாக இருக்க மாட்டோம் என பாஜகவை எச்சரித்துள்ளார்.