மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, இந்திய அரசியலமைப்பை காக்க உயிரை கொடுக்கவும் தயாராக இருப்பதாக ஆவேசமாக பேசினார்.
நந்தர்பாலில் பிரசாரம் செய்த ராகுல் காந்தி, பாஜக அரசு, மகாராஷ்டிராவுக்கு வரும் திட்டங்களை எல்லாம் மற்ற மாநிலங்களுக்கு மறைமாற்றுவதாக குற்றம் சாட்டினார். இதனால் மகாராஷ்டிராவில் வேலையில்லா திண்டாட்டம் இருப்பதாகவும் மக்கள் வேலைதேடி பிற மாநிலங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் குற்றம் ராகுல் குற்றம் சாட்டினார். நான் காட்டும் அரசியலமைப்பு புத்தகத்தில் வெற்று காகிதம் இருப்பதாக சொல்லும் பிரதமர் மோடி, வாழ்நாளில் இந்திய அரசியலமைப்பை படித்ததே இல்லை என விமர்சித்தார். இந்திய அரசியல் சாசனத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்களை பாதுகாப்பதற்காக உயிரையும் கொடுக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் ராகுல் தெரிவித்தார்.