மீண்டும் உயரும் சொத்து வரி.. எத்தனை சதவீதம் தெரியுமா?

Update: 2024-09-28 02:27 GMT

ரிப்பன் மாளிகையில் மாதாந்திர மாநகராட்சி மாம‌ன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாநகராட்சியில் சொத்து வரியை 6 சதவீதம் வரை உயர்த்துவது உட்பட 68 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இதில், சொத்து வரி உயர்வு, மயானத்தை தனியாரிடம் ஒப்படைப்பது, குப்பை கொட்டுவதில் விதிக்கப்படும் அபராதம் உயர்வு ஆகிய 3 தீர்மானங்களுக்கு விசிக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். அதே நேரத்தில், திமுகவினர் உட்பட பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன், சொத்து வரி உயர்வு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விசிக உறுப்பினர் கோபிநாத், மயானத்தை தனியார்மயமாக்கினால் சாதிய சுடுகாடுகள் உருவாகும் என்றும், ஏழை மக்களை பாதிக்கும் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறினார். இதே போன்று, தங்கள் தரப்பு வாத‌த்தை பேசவே அனுமதிக்கவே இல்லை என கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கூட்டாக தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்