புதுச்சேரியில் புத்தாண்டை கொண்டாட லட்சக்கணக்கானோர் கடற்கரை சாலையில் கூடுவார்கள் என்பதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 31ஆம் தேதி பிற்பகல் முதல் ஒய்ட் டவுன் பகுதி முழுவதும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒய்ட் டவுன் பகுதியை சுற்றி பத்து இடங்களில் வாகன நிறுத்தும் இடங்கள் அமைக்கப்பட உள்ளது, ஒயிட் டவுன் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மட்டும் பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2 லட்சம் பேர் வரை கடற்கரை சாலையில் கூடிய நிலையில், இந்த ஆண்டு அதைவிட கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.