கல்லூரி மாணவிகள் குடுமிப்பிடி சண்டை - "எதற்கு வம்பு" என வேடிக்கை பார்த்த மாணவர்கள்..வைரலாகும் வீடியோ
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு கல்லூரி வளாகத்துக்குள் 2 மாணவிகள் குடுமிப்பிடி சண்டையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 2 மாணவிகள் அவர்கள் சண்டையை விலக்கி விட முயற்சித்தும் பலனில்லை... சுற்றி நின்று வேடிக்கை பார்த்த மாணவர்கள் தங்களுக்கெதற்கு வம்பு என்பதைப்போல அந்த இடத்தை விட்டு நழுவிச் சென்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.