எம்.பி. கதிர் ஆனந்த் கல்லூரியில் 44 மணிநேர தொடர் ரெய்டுசிக்கிய முக்கியமான ஹார்ட் டிஸ்க் | ED Raid

Update: 2025-01-05 02:25 GMT

காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள, திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரியில், அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 3-ஆம் தேதி சோதனையை தொடங்கினர். 3 நாட்களாக நடைபெற்று வந்த சோதனை, சுமார் 44 மணி நேரத்திற்கு பின் நிறைவு பெற்றது. 8 கார்களில் வந்திருந்த 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், சோதனை முடிந்த பின் நள்ளிரவு 2.35 மணியளவில் புறப்பட்டுச் சென்றனர். இச்சோதனையின் போது கல்லூரியின் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் அமலாக்கத் துறையினர் கட்டுப்பாட்டில் வைத்து கண்காணித்ததாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில் கணக்கில் வராத பணம், கல்லூரி, வங்கி பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள், கணினியின் ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் பணம், கல்லூரியில் இம்மாதம் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பொங்கல் போனஸ் வழங்க வைக்கப்பட்டிருந்த பணம் என்றும், மாணவர்கள் பல்வேறு வகையில் செலுத்திய கட்டணம் என்றும் கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்