"கூட்டணி கட்சியினர் பொறுப்போடு பேசுங்க" - எச்சரித்த ஆர்.எஸ்.பாரதி

Update: 2025-03-21 04:01 GMT

திமுக கூட்டணியில் இருப்பவர்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற முதல்வர் பிறந்த நாள் விழா கூட்டத்தில் பேசிய அவர், கூட்டணியில் உள்ளவர்கள் பொறுப்புணர்ந்து பேச வேண்டும் என்றும், திமுக எந்த காலத்திலும் யாருக்கும் பயப்படாது என்றும் தெரிவித்தார். புதுச்சேரி மாநிலத்தில் ஏற்கெனவே திமுக-காங்கிரஸ் கூட்டணியில் கருத்து மோதல் நிலவி வரும் நிலையில், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு காங்கிரஸ் கட்சியை எச்சரிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்