``பட்டியலின மாணவர்களின் வெளிநாட்டு உயர்கல்வி செலவை அரசே ஏற்கும்..'' கெஜ்ரிவால் அதிரடி

Update: 2024-12-21 13:59 GMT

டெல்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் 'அம்பேத்கர் சம்மான் ஸ்காலர்ஷிப்' என்கிற திட்டத்தை ஆம் ஆத்மி அரசு செயல்படுத்தும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கல்விக்கு அம்பேத்கர் உயரிய முக்கியத்துவம் அளித்ததாக குறிப்பிட்டுள்ள அவர், பணம் இல்லாததன் காரணமாக பட்டியல் இனத்தைச் சேர்ந்த எந்த ஒரு குழந்தையும் கல்வி பெறாத நிலை இருப்பதை தான் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். பட்டியலின சமூகத்தை சேர்ந்த யார் ஒருவரும், உலகில் உள்ள எந்த பல்கலைக்கழகத்தில் வேண்டுமானாலும் உயர்கல்வி பயில முடியும் என்றும், அதற்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார். அம்பேத்கர் பற்றிய அமிஷாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அம்பேத்கர் பெயரிலான இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தை அறிவிப்பதாக கேஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்