டெல்லி தேர்தல் - யார் யார் எந்த தொகுதி..? வெளியான பாஜக வேட்பாளர் பட்டியல்

Update: 2025-01-05 03:31 GMT

எதிர்வரும் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 29 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள பாஜக, புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக பர்வேஷ் வெர்மாவையும், முதல்வர் அதிஷி போட்டியிடும் கால்காஜி தொகுதியில் ரமேஷ் பிதூரியையும் வேட்பாளராக களம் இறக்கியிருக்கிறது. ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட்டிற்கு பிஜ்வாசன் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்