விளம்பரத்துக்காக திட்டங்களை அறிவித்துவிட்டு, நிதி ஒதுக்காமல் தி.மு.க நாடகமாடுவதாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அரசு கூறும் செலவினங்கள், மானியக் கோரிக்கையுடன் சற்றும் ஒத்துப் போகவில்லையே ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நிதி ஒதுக்கீடு, செலவீனங்கள் குறித்த சரியான தரவுகள் அரசிடம் இருந்தால்,
எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் தயக்கம் எதற்கு என அண்ணாமலை வினா எழுப்பியுள்ளார்.