``மத்திய அரசின் பதிலால் திமுகவின் முகமூடி கிழிந்தது’’ - அன்புமணி

Update: 2025-03-21 03:09 GMT

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மத்திய அரசின் பதிலால் திமுகவின் சமூகநீதி முகமூடி கிழிந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாமா? என்பது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசிடமிருந்து எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று மத்திய அரசு கூறியிருப்பதாக தெரிவித்த அன்புமணி, மத்திய அரசிடமிருந்து எந்த விளக்கமும் பெறாமல் தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தங்களுக்கு அதிகாரமில்லை என்று கூறி வருவதன் மூலம், திராவிட மாடல் அரசுக்கு சமூகநீதியில் எந்த அக்கறையும் இல்லை என்பது அம்பலமாகியுள்ளதாக விமர்சித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்