உலகின் மிக விலையுயர்ந்த Wolfdog-அ பெங்களூர சேர்ந்த ஒருத்தர், சுமார் 50 கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கது பேசு பொருளாகியிருக்கு. Cadabomb Okami கடபாம்ப் ஒகாமி அப்டின்னு பெயர் கொண்ட இந்த கலப்பின வகை நாய, அமெரிக்காலேந்து வாங்கிட்டு வந்துருக்காரு இந்திய நாய்கள் வளர்ப்போர் சங்க தலைவர் சதீஷ். ஓநாய் மற்றும் ஷெப்பர்ட் வகை நாய் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பின வளர்ப்பு நாயான இந்த Wolfdog, டெய்லி சுமார் 3 கிலோ இறைச்சி சாப்பிடுதாம். ஒகாமிய ஒரு ஷோல அறிமுகப்படுத்துன வீடியோ தான் இப்போ வைரலாகிருக்கு.