ஏழை மக்கள் மேம்பாட்டுக்கு யார் பிரதமராக வேண்டும்? - கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும்? ஏழை மக்கள் மேம்பாட்டுக்கும், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்படவும் யார் பிரதமராக வேண்டும்? என மக்கள் விரும்புகிறார்கள் என்பது குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் உங்கள் பார்வைக்கு...
எதிர்வரும் மக்களவை தேர்தலையொட்டி யார் பிரதமராக மக்கள் விரும்புகிறார்கள் என கருத்துக்கணிப்பை மாத, மாதம் வெளியிடும் தந்தி டிவி, நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு யார் பிரதமராக வேண்டும்? ஏழை மக்கள் மேம்பாட்டுக்கு யார் பிரதமராக வேண்டும்? சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பட யார் பிரதமராக வேண்டும்? என்ற கேள்விகளுக்கும் மக்கள் பதிலை கேட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு ராகுல் காந்தி பிரதமராக 65 % பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு 34% பேர் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
மே மாதம் தொடங்கி 3 மாத கருத்துக்கணிப்பையும் ஒப்பிடுகையில் மே மாதம் ராகுல்காந்திக்கு 64 % பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். நரேந்திர மோடி 34% பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதுவே ஜூன் மாதம் மற்றவர்களிடம் இருந்த 2 சதவீத ஆதரவு ராகுல் காந்திக்கு சென்றது. பிரதமர் மோடிக்கு அதே 34 % தொடர்ந்தது. ஜூலை மாதமும் பிரதமர் மோடிக்கு அதே ஆதரவு தொடர்கிறது. ஆனால் ராகுல் காந்தியிடம் இருந்த ஒரு சதவீத ஆதரவு மற்றவர்களுக்கு சென்று அவருக்கான ஆதரவு 65 % ஆக குறைந்துள்ளது
மே மாதம் தொடங்கி 3 மாத கருத்துக்கணிப்பையும் ஒப்பிடுகையில் பிரதமர் மோடிக்கான ஆதரவு மே மாதம் 34% ஆக இருந்தது. ஜூன் மாதமும் அதே நிலையே தொடர்ந்தது. ஜூலையிலும் அதே நிலையே தொடர்கிறது. ராகுலை பொறுத்த வரையில் மே மாதம் 64 % ஆக இருந்த ஆதரவு, ஜூன் மாதம் 66 % ஆக உயர்ந்தது. ஆனால் ஜூலையில் 65 % ஆக குறைந்துள்ளது. ராகுல் காந்தியிடம் இருந்த ஒரு சதவீத ஆதரவு மற்றவர்களுக்கு சென்றது.
ஏழை மக்கள் மேம்பாட்டுக்கு யார் பிரதமராக வேண்டும்? என்பதற்கு ஜூலை மாதம் ராகுல்காந்திக்கு 71 % பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு 28 % பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுவே மே மாதம் பிரதமர் மோடிக்கு 27 % பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜூன் மாதம் அவருக்கான ஆதரவு 2 % உயர்ந்து 29 % ஆக இருந்தது. ஜூலையில் ஒரு சதவீதம் குறைந்து 28 % ஆக உள்ளது. ராகுல் காந்தியை பொறுத்தவரையில் மே மாத ஆதரவு 72 % ஆக இருந்தது. ஜூன் மாதம் 70 ஆக சரிந்தது. ஜூலை மாதத்தில் 71 % ஆக உயர்ந்தது. பிரதமர் மோடியிடம் இருந்து ஒரு சதவீத ஆதரவு ராகுலுக்கு சென்றது
சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மேம்பட யார் பிரதமராக வேண்டும்? என்பதற்கு ஜூலையில் ராகுல்காந்திக்கு 70 % பேரும், பிரதமர் நரேந்திர மோடிக்கு 29 % பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதுவே மூன்று மாத கருத்துக்கணிப்பையும் ஒப்பிட்டு பார்க்கையில் மே மாதம் ராகுல்காந்திக்கு 68 % பேரும், பிரதமர் நரேந்திர மோடிக்கு 31 % பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். ஜூன் மாதம் ராகுல்காந்திக்கான ஆதரவு ஒரு சதவீதம் குறைந்து 67 % ஆக இருந்தது. பிரதமர் மோடிக்கு அதே 31 % ஆதரவு தொடர்ந்தது. இப்போது ஜூலை மாதம் பார்க்கையில் பிரதமர் மோடியிடம் இருந்து 2 % ஆதரவும் மற்றவர்களிடம் இருந்து 1 % ஆதரவும் அப்படியே ராகுல் காந்திக்கு செல்ல அவருக்கான ஆதரவு 70 % ஆக உயர்ந்துள்ளது. இதுவே பிரதமர் மோடிக்கான ஆதரவு 29 % ஆக குறைந்துள்ளது.
இதுவே மூன்று மாத கருத்துக்கணிப்பையும் ஒப்பிட்டு பார்க்கையில் மே மாதம் பிரதமர் மோடிக்கான ஆதரவு 31 % ஆக இருந்தது. ஜூன் மாதம் அதே அளவு ஆதரவு நீடிக்க ஜூலையில் 29 % ஆக குறைந்துள்ளது. ராகுல் காந்தியை பொறுத்த வரையில் 68 % ஆக இருந்த ஆதரவு 67 % ஆக குறைந்து, 70 % ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதம் பார்க்கையில், பிரதமர் மோடியிடம் இருந்து 2 % ஆதரவும் மற்றவர்களிடம் இருந்து 1 % ஆதரவும் அப்படியே ராகுலுக்கு சென்றுள்ளது.
----------------------------