"5 வயது, ஒன்றரை வயது குழந்தை சார்..கை, கால், தலை இல்லாமல் சுடுகாட்டில்" - கேஸ் வைத்து எரிக்கிறோம்"

Update: 2024-08-02 05:21 GMT

வயநாடு நிலச்சரிவில் பலியானவர்களை தகனம் செய்யும் பணியாளர்கள் கூறும் தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன... இதுபற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...

கை தனியே...கால் தனியே...தலை தனியே...என மிகக் கொடூரமாக சிதைந்து கிடக்கும் உடல்கள்...

அடையாளம் காண முகமாவது தெரிந்திருக்க வேண்டும்...ஆனால் முகமே இல்லாத உடல்களை அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியுமா?...

தாலாட்டுப்பாடி...பொத்தி பொத்தி வளர்க்கப்பட்ட பச்சிளங் குழந்தைகள் பாறைகளும் மண்ணும் விழுந்து உடல் சிதைந்து போன கோரக் கதையை எங்கு போய் சொல்வது?... வரிசையாய் வந்து கொண்டிருக்கும் சடலங்கள் விடிய விடிய எரியூட்டப்படும் பரிதாபம்...

இறந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரவர் மத நம்பிக்கையின்படி இறுதிச் சடங்குகள் செய்யும் பணியில்

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன... கண்ணீருடன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு பிஞ்சுகளின் சடலங்களையும்...வெறும் கை கால்களையும்... தலையில்லா உடல்களையும் தகனம் செய்து வருகின்றனர் இந்த ஊழியர்கள்...

கனமழை, நிலச்சரிவால் விறகுகள் நிறைய கிடைக்காத சூழலில் உடல்கள் எவ்வாறு தகனம் செய்யப்படுகிறது என்பதைப் பாருங்கள்...

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றி சடலங்கள் அடுத்தடுத்து தகன மேடை நோக்கி வந்து கொண்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது...

Tags:    

மேலும் செய்திகள்