ஓபோவின் புதிய ப்ரீமியம் மொபைல்கள் அறிமுகம் | OPPO

Update: 2025-01-11 13:15 GMT

ரினோ 13 ப்ரோ, ரினோ 13 உள்ளிட்ட மாடல்களை ஓபோ நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செல்போன்களில், ஏ ஐ லைவ் போட்டோ, ஏஐ எடிட்டர், ஏஐ Unblur, ஏஐ கிளாரிட்டி இன்னும் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. நீருக்கு அடியில் புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பமும் முதல் முறையாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதி நவீன தொழில்நுட்பங்களை கொண்ட Reno 13 128 GB போனின் விலை 37 ஆயிரத்து 999 ரூபாயாகவும், Reno 13 Pro 256 GB போனின் விலை 49 ஆயிரத்து 999 ரூபாயாகவும், Reno13 Pro 512GB போனின் விலை 54 ஆயிரத்து 999 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வருகிற 17ஆம் தேதி வரை புதிய ப்ரீமியம் ஸ்மார்ட்போன்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 17ஆம் தேதி வரை செல்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. புதிதாக சந்தைக்கு வந்துள்ள Reno13 Pro மற்றும் Reno13 மொபைல் போன்கள் மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்