18 வயது மாணவியை சீரழித்த 60 பேர்...வலி தாங்க முடியாமல் துடிதுடித்த கொடுமை...நடுங்கவிடும் வாக்குமூலம்

Update: 2025-01-11 17:05 GMT

கேரளாவில், பதினெட்டு வயது விளையாட்டு வீராங்கனைக்கு நடந்த கொடுமைகள் ஒட்டு மொத்த மாநிலத்தையும் அதிர வைத்து இருக்கும் நிலையில் அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

தடகள போட்டியில் ஆர்வமாக ஈடுபட்ட வந்த மாணவியை 60க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கேரளா மாநிலம் பத்தணம்திட்டாவில் உள்ள பள்ளியில் படித்து வரும் 18 வயது மாணவி ஒருவர் விளையாட்டு வீராங்கனையாக இருந்து வருகிறார். விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மாணவி அதற்கான பயிற்சிகளை எடுத்து வந்து இருக்கிறார்.

அப்போது பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து இருக்கிறது.இந்த

நிகழ்ச்சியை நடத்திய பெண் அதிகாரிகளிடம் தயங்கித் தயங்கி வந்த அந்த மாணவி கூறிய வாக்குமூலம் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறு வயது முதலே தடகள போட்டியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட அந்த மாணவியை, 13 வயதிலேயே அந்த பகுதியில் உள்ள பிரபல தடகள பயிற்சியாளரிடம், சிறந்த வீராங்கனையாக வர வேண்டும் என்ற நம்பிக்கையில் அவரது தந்தை சேர்த்து விட்டு இருக்கிறார்.

அப்போது சிறுமியிடம் பயிற்சி என்ற போர்வையில் தடகள பயிற்சியாளர் அத்துமீறி இருக்கிறார்.தொடர்ந்து சிறுமியைப் பயிற்சியாளர், உடன் பயிற்சி பெறும் தட வீரர்கள் ஆகியோர் பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர். உடல் வலியால் துடித்த சிறுமிக்கு தனக்கு என்ன நடக்கிறது என்பதை கூற முடியவில்லை.

இதனைத் தொடர்ந்து சிறுமியின் வீட்டு பக்கத்தில் உள்ளவர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து இருக்கின்றனர். சிறுமியிடம் போன் இல்லாததால் அவரது தந்தை போன் மூலம் பலரும் பேசி அவரை நகரில் பிரபலமாக உள்ள பல பகுதிக்கு அழைத்துச் சென்று சீரழித்து இருக்கின்றனர்.

இதில் சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்து மிரட்டியும் வன்கொடுமை செய்து இருக்கின்றனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குழந்தைகள் நல அதிகாரிகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கின்றனர்.

இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மாணவி பயன்படுத்திய அவரது தந்தையின் செல்போனை ஆய்வு செய்ததில் சுமார் 32 பேர் சிறுமியை பல்வேறு விதங்களில் கொடுமை செய்தது தெரியவந்து இருக்கிறது.

இதில் சில பேர் குற்றவாளிகளாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்து இருக்கிறது. இதில் சில பேர் மாணவியை வன்கொடுமை செய்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டு இருப்பதும் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிறுமியின் வீடியோவை வெளியிட்ட இணையதளங்களை முடக்கும் வேலைகளில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தொடர் விசாரணையில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் மாணவியை வன்கொடுமை செய்து இருப்பது தெரியவர அதிர்ச்சியடைந்த போலீசார் அருகில் பல காவல் நிலையங்களிலும் போக்சோ பிரிவின் கீழ் பல வழக்குப் பதிவு செய்து இருக்கின்றனர். முதற்கட்டமாக மாணவியை வன்கொடுமை செய்த பதினைந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆசைப்பட்ட மாணவி சீரழிக்கப்பட்டு இருப்பது சமூகத்தின் அவலம் என்று தான் கூற வேண்டும்....

Tags:    

மேலும் செய்திகள்