``எனக்கு நேர்ந்த அவமரியாதை.. மனதளவில் மிகவும் பாதிப்பு’’ - மொத்தத்தையும் கொட்டி தீர்த்து மோடி வேதனை

Update: 2025-01-11 08:26 GMT

பிரதமர் நரேந்திர மோடியுடன் மக்கள் என்ற தலைப்பில் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் முதல்முறையாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தான் ஒன்றும் கடவுள் இல்லை, தவறு செய்வது இயற்கைதான்

என்று பேசியிருப்பது தேசிய அரசியலில் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் பேசியதன் முக்கிய அம்சங்களை விவரிக்கிறது பின்வரும் தொகுப்பு...

Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்துடன் Nikhil Kamath

பிரதமர் நரேந்திரமோடியின் முதல் போட்காஸ்ட் வெள்ளிக்கிழமை ஒளிபரப்பானது.

People with Prime Minister Narendra Modi என்ற நிகழ்ச்சியில்

பேசியபோது, அரசியல் தொடங்கி தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பிரதமர்

மோடி பகிர்ந்துகொண்டார்.

அரசியலை கேவலமான விளையாட்டு என்று நினைக்கும் மக்கள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வியை பிரதமரிடம் காமத் முன்வைத்தார்.

அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, நீங்கள் சொல்வதை நீங்கள் நம்பினால், இப்படி ஒரு உரையாடலை நாம் நடத்த மாட்டோம் என்றார்.

குஜராத் முதல்வராக இருந்தபோது பேசிய சில பழைய பேச்சுகள் குறித்து கேட்டதற்கு,

தானும் ஒரு மனிதன் தான், தவறு செய்வது இயற்கையானது, தான் ஒன்றும் கடவுள் இல்லை என்றும் அதிரடியாக பதிலளித்தார் பிரதமர் மோடி.

அரசியலுக்கு வருவதற்கு அடிப்படை தகுதி வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினார் காமத். அதற்கு, அரசியல்வாதியாக மாறுவதும், வெற்றிகரமான

அரசியல்வாதியாக இருப்பதும் தனித்தனி விஷயங்கள் என்று சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, அரசியலில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். நல்ல மற்றும் கெட்ட நேரங்களில் மக்களுடன் நிற்க வேண்டும் என்று தெரிவித்தார்.

2014ல் முதல்முறையாக தான் பிரதமராக பதவியேற்றபோது, சீன அதிபர் ஸீ ஜின்பிங் குஜராத்திலுள்ள தன் சொந்த கிராமத்திற்கு

வர விரும்புவதாக தன்னிடம் கூறியதாக பிரதமர் நினைவுகூர்ந்தார்.

இதேபோல், 2005 ஆம் ஆண்டு தான் எம்.எல்.ஏ. வாக இருந்தபோது, தனக்கு அமெரிக்கா விசா மறுக்கப்பட்டதை ஆதங்கத்துடன் கூறிய பிரதமர் மோடி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதியான

தனக்கும் நேர்ந்த அவமரியாதை தன்னை மிகவும் பாதித்ததாக குறிப்பிட்டார்.

2025 ஆம் ஆண்டில் இப்போது இந்தியாவுக்கு வர

விசா கிடைக்க உலகமே காத்துக்கொண்டிருப்பதாகவும், இது இந்தியாவுக்கான நேரம் என்றும் பிரதமர் பெருமிதத்துடன்

கூறினார்.

அதே நேரம், தான் ஒன்றும் கடவுள் இல்லை என்ற பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

8 மாதங்களுக்கு முன்பு, தான் உயிரியல் ரீதியில் பிறக்கவில்லை, கடவுள் தான் தன்னை பூமிக்கு அனுப்பியதாகவும்

கூறிய பிரதமர் இப்போது, தான் ஒன்றும் கடவுள் இல்லை என்று

சொல்வது வேடிக்கையானது என்று காங்கிரஸ் மூத்த தலைவர்

ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்