Ex. IASக்கு நேர்ந்த கொடுமை... அடித்து உதைத்து பஸ்சில் இருந்து கீழே தள்ளிய நடத்துனர் - ஷாக் வீடியோ

Update: 2025-01-13 14:02 GMT

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் பேருந்தில் பயணம் செய்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை பேருந்து நடத்துநர் அடித்து உதைத்து, பேருந்தில் இருந்து கீழே தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரில் ஆர்.எல்.மீனா என்ற 75 வயது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி, தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது, அவர் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் குறித்து நடத்துநர் அறிவிக்காததால், அடுத்த பேருந்து நிறுத்தத்தில் இறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பேருந்தில் அவர் கூடுதலாக பயணம் செய்ததால், அவரிடம் 10 ரூபாய் தருமாறு பேருந்து நடத்துநர் கேட்டுள்ளார். ஆனால், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி 10 ரூபாயை தர மறுத்ததால், அவரை பேருந்து நடத்துநர் வசைபாடியிருக்கிறார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியை பேருந்தின் நடத்துநர் தள்ளியதால் கோபமடைந்த முதியவர், நடத்துநரின் கன்னத்தில் வேகமாக அறைந்துள்ளார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த அந்த நடத்துனர், முதியவர் என்றும் பாராமல், அவரை அடித்து உதைத்து பேருந்தில் இருந்து கீழே தள்ளினார். இதையடுத்து, முதியவர் மீனா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே நடத்துநரின் மோசமான செயலுக்காக அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்