கேட்க கூடாத கேள்வியை கேட்ட பிரபல யூடியூபர் - சுளுக்கெடுத்து விட்ட சாமியார்
தேவையற்ற கேள்விகள் கேட்டதாகக் கூறி யூ டியூபரை சாமியார் ஒருவர் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தப்ரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள வந்துள்ள மஹாகால் கிரி பாபா என்ற பிரபல சாமியாரிடம் யூ ட்யூபர் ஒருவர் நேர்காணல் செய்தார்... அப்போது நீங்கள் எப்போது முதல் துறவி ஆனீர்கள் என கேட்க, தான் சிறுவயதிலேயே துறவி ஆகி விட்டதாக சாமியார் பதிலளித்தார். அதன்புறகு நீங்கள் எந்த கடவுளை வழிபடுகிறீர்கள்? என்ன பஜனை பாடுவீர்கள்? என தொடர் கேள்விகளை யூ டியூபர் முன்வைத்த நிலையில் அந்த சாமியார் அவரை சரமாரியாக தாக்கி விரட்டியடித்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பரவி வருகிறது.