“என் ஆள பாக்க போறேன்'' - காதலியை தேடி 300கிமீ சென்ற புலி

Update: 2024-11-19 13:44 GMT

ஜானி என்ற ஆண் புலி, மகாராஷ்டிராவின் திபேஷ்வர் வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து தெலங்கானாவுக்கு 300 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, துணையை தேடி சென்றதாக கூறப்படுகிறது.

புலியின் பயணம், ரேடியோ காலர் மூலம் கண்காணிக்கப்பட்ட நிலையில், காடுகள் மற்றும் வயல்களைக் கடந்து தனது நீண்ட நெடும் பயணத்தைத் தொடர்ந்தது... இனச்சேர்க்கை காலம் என்பதால் ஜானி மகாராஷ்டிராவின் கின்வாட் தாலுகாவிலிருந்து அக்டோபர் 3வது வாரத்தில் காட்டில் தனது பயணத்தை தொடங்கி உள்ளது. ஹைதராபாத்-நாக்பூர் தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து, தற்போது திரியானி பகுதியை நோக்கி புலி சென்று கொண்டிருக்கிறது...

செல்லும் வழியில் ஜானி 5 கால்நடைகளை வேட்டையாடியுள்ளது.. மேலும் பசுக்களை வேட்டையாட முயன்றுள்ளது... துணையைத் தேடும் புலிகள் மனிதர்களுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று வனத்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர்,

இருப்பினும் மக்கள் விலங்குகளை எதிர்கொள்ளவோ ​​அல்லது தொந்தரவு செய்யவோ வேண்டாம் என்று உள்ளூர்வாசிகளை எச்சரித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்