வீட்டுக்குள் புகுந்தவனால் அக்கா, தங்கைக்கு நேர்ந்த கொடூரம்... ஊரையே அதிர வைத்த அலறல் சத்தம்..!

Update: 2023-09-10 13:45 GMT

கேரளா மாநிலம் பாலக்காட்டில், 72 வயது மூதாட்டியின் வீட்டினுள் புகுந்த கொள்ளையர், கேஸ் சிலிண்டரை திறந்து வைத்து மூதாட்டியை மிரட்டியதும், இதன் பின் நிகழ்ந்த கோரமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது...

கேரளாவின் பாலக்கோடு அருகே நீலமலைக்குன்று பகுதியை சேர்ந்தவர் பத்மினி... 72 வயதான இவர் செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில், இவரும் இவருடைய சகோதரி தங்கம் என்பவரும் அருகருகில் தனித்தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர்...

இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கடைசி வரை தனியாக வசித்து வந்த நிலையில், திடீரென சகோதரிகள் இருவரின் அலறல் சத்தமும்... வீட்டினுள் சிலிண்டர் வெடித்தது போல் ஏற்பட்ட பலத்த சத்தமும் அக்கம்பக்கத்தினரை திடுக்கிடச் செய்தது...

பத்மினியின் வீடு மளமளவென தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டினுள் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தப்பியோட முயன்றது அவர்களை மேலும் பரபரப்படைய செய்துள்ளது...

அக்கம்பக்கத்தினர் அவர்களை விரட்டிப்பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய நிலையில், தீயணைப்பு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்...

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், வீட்டினுள் இருந்து பத்மினியையும், அவரது சகோதரி தங்கத்தையும் தீக் காயங்களுடன் சடலமாக மீட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

இந்நிலையில், பொதுமக்களிடம் சிக்கி ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்த நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அளித்த வாக்குமூலம் மக்களை அதிர்ச்சியடைய செய்தது...

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மூதாட்டி பத்மினியின் வீட்டிற்கு ஒரு கும்பல் பெயிண்ட் அடிக்க வந்துள்ளது... அந்த கும்பலில் ஒருவர் தான் இவரும், பெயர் மணிகண்டன்..

வீட்டில் மூதாட்டி தனியே வசித்து வருவதையும், அவரது வீட்டில் தங்க நகைகள் இருப்பதையும் கண்ட மணிகண்டன், அந்த நகைகளை கொள்ளையடிக்க மூதாட்டியின் வீட்டை தொடர்ந்து நோட்டமிட்டு வந்திருக்கிறார்...

இதன்படியே சம்பவத்தன்று மூதாட்டியின் வீட்டிற்குள் நேரம் பார்த்து குதித்திருக்கிறார்...

திடீரென, வீட்டிற்குள் இருந்து அக்காவின் அலறல் சத்தம் கேட்டு பதறிப்போன தங்கம்.... வீட்டினுள் கேஸ் சிலிண்டரை திறந்து... தீ வைப்பது போல் அக்காவை ஒருவர் மிரட்டி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்...

வீட்டினுள் நகைகள் எங்குள்ளது எனவும், நகைகளை எடுத்துவரக்கூறியும் பத்மினியை மிரட்டிக்கொண்டிருந்த மணிகண்டன், சில நகைகளை திருடிய பின்பு, சட்டென சிலிண்டரை பற்ற வைத்து ஓட்டம் பிடித்ததின் அடையாளம் தான் இந்த கோரம் என போலீசாருக்கு தெரியவந்தது...

மணிகண்டனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்த நிலையில், இந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

Tags:    

மேலும் செய்திகள்