அதிகாலையில் அலறிய ஒட்டுமொத்த கிராமம் - துடி துடித்து இறந்த 5 உயிர்கள்-நடுங்க விட்ட திக் திக் சம்பவம்
யாதாத்திரி மாவட்டம் ஜலப்பூர் கிராமம் அருகே, அதிகாலையில் சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்த கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோத்தில் உள்ள ஏரிக்குள் பாய்ந்து மூழ்கியது. காரில் பயணித்த இளைஞர்களில் ஐந்து பேர் தண்ணீரில் மூழ்கி மூச்சுச்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏரியின் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் கிராம மக்கள், காரை கயிறு கட்டி இழுத்து சடலங்களை மீட்டனர். காரில் பயணம் செய்த ஆறு பேரும் ஹைதராபாத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.