"இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற..." மகிழ்ச்சியுடன் திரௌபதி முர்மு சொன்ன ஐடியா
இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற 'தேசம் முதலில்' என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவது அவசியம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் லோக்மந்தன்-2024 தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், நமது விலைமதிப்பற்ற மரபுகளை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நமது இயற்கையான ஒற்றுமையை குலைக்க செயற்கையான வேறுபாடுகள் உருவாக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்த திரௌபதி முர்மு, மக்களிடையே கலாச்சார தாழ்வு மனப்பான்மையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டினார். இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மக்களிடையே 'தேசம் முதலில்' என்ற உணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்ற குடியரசுத் தலைவர், இந்த உணர்வை லோக்மந்தன் பரப்பி வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.