உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு - நாடு முழுவதும் பறந்த கடிதம்

Update: 2025-01-02 17:35 GMT

சிறைகளில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை நிர்வர்த்தி செய்ய உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய உள்துறை அமைச்சகம் சிறை விதிகளில் திருத்தங்களை செய்துள்ளது. அதன்படி செயல்பட மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. அதில், சிறைகளில் சாதி அடிப்படையில் கைதிகளிடம் பாகுபாடு காட்டக்கூடாது; சாதி அடிப்படையில் கைதிகளை பிரிக்கக்கூடாது; கைதிகளுக்கு சாதி அடிப்படையில் பணிகளை ஒதுக்கக்கூடாது; 2013 மனித கழிவுகளை மனிதனே அள்ளுவதற்கான தடை சட்டம் சிறைகளுக்கும் பொருந்தும், சிறையில் கைதிகளை மனித கழிவுகளை அள்ள செய்யக்கூடாது; சிறைச்சாலைகளில் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் பணியில் கைதிகளை ஈடுபடுத்தக் கூடாது என அதில் தெரிவித்துள்ளது

Tags:    

மேலும் செய்திகள்