சபரிமலை மகரஜோதி தரிசனம் - மனித கடல் போல் காட்சியளிக்கும் பம்பை

Update: 2025-01-13 02:49 GMT

சபரிமலை மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு, பம்பையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் புகழ்பெற்ற மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம், நாளை நடைபெறவுள்ளது. பொன்னம்பலம் மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவமாக பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார். இதுவரை 12 லட்சம் பேர் ஐயப்பனை தரிசித்துள்ள நிலையில், இன்றும் நாளையும் ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகரஜோதியை காண கடந்த 11-ஆம் தேதி முதல் லட்சக்கணக்கான பக்தர்கள், பம்பையில் தங்கியுள்ளனர். தேவசம்போர்டு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தங்கும் இடங்களில், ஏராளமான பக்தர்கள் சிறுவர் சிறுமிகளுடன் தங்கியுள்ளனர். பம்பை ஆற்றில் குளித்தும், ஐயப்பன் பாடல்களை பாடியும் மகரஜோதியை காண ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் பம்பை முழுவதும் மனிதக்கடல் போல் காட்சியளிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்