"விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பி, திரும்ப அழைத்து வர வேண்டும்" - நாராயணன் | ISRO
‘இஸ்ரோ‘ புதிய தலைவராக பதவியேற்க உள்ள நாராயணன், தனது சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள காட்டுவிளை பகுதிக்கு சென்றிருந்தார். அங்கு அவரது உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் திரண்டு வந்து நாராயணனை வரவேற்று வாழ்த்தினார்கள். இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், சந்திரயான்- 3 திட்டத்துக்கான இயந்திரத்தை மற்ற நாடுகள் வழங்காத நிலையில், கூட்டு முயற்சியில் உருவாக்கி வெற்றி பெற்றதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.