ரயில்வே பிளாட்பாரத்தில் கொடூரம்..மொத்தமாக செத்துவிட்டதா மனிதம் -நாட்டையே நரம்புபுடைக்க விட்ட வீடியோ
லக்னோ சார்பாக் ரயில் நிலையத்தில், பெண்கள் குழந்தைகள் என பாராமல்...நடைமேடையில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது குளிர்ந்த நீரை இரைத்து எழுப்பும் காட்சி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மறித்து விட்டதா மனிதம் ? என இணையவாசிகளை கொந்தளித்து கேள்வி எழுப்ப வைத்து விட்டது, இந்த காணொளி...
லக்னோவில் உள்ள சார்பாக் ரயில் நிலையத்தில், இரவு நேரத்தில் பயணிகள் பலர் நடைமேடையிலேயே படுத்து உறங்கியுள்ளனர்...
கடுங்குளிருக்கு மத்தியில் போர்வை போர்த்தி உறங்கிக் கொண்டிருந்த சூழலில், ரயில்வே நிர்வாகம் சார்பில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த சிலர் நடைமேடையை சுத்தப்படுத்த தண்ணீரை வாரி இரைத்து வந்துள்ளனர்..
நடைமேடையில் குழந்தைகள், முதியோர்கள், பெண்கள் என பலர் உறங்கிக் கொண்டிருக்க, அதனை பொருட்படுத்தாமல் அவர்கள் மீது குளிர்ந்த நீரை வாரி இரைத்துள்ளனர் தூய்மை பணியாளர்கள்...
இதனால் பயணிகள் பதறியடித்துக் கொண்டு அங்கிருந்து எழுந்த காட்சிகள் காண்போர் மனதை ரணமாக்கியது...
இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது...
இது தொடர்பாக, வருத்தம் தெரிவித்துள்ள ரயில்வே நிர்வாகம், சம்பந்தப்பட்ட சுகாதார ஏஜென்சியிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்பு கூடம், விடுதி என பல வசதிகள் உள்ளதால் அதனை பயணிகள் பயன்படுத்துமாறும், நடைமேடையில் உறங்குவதை தவிர்க்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.