இந்த ரேஷன் அட்டை கொண்ட குடும்ப தலைவிகளுக்கும் உதவித்தொகை..Puducherry CM அறிவிப்பு
புதுச்சேரியில் எந்தவித அரசு உதவித்தொகையும் பெறாத மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரின் ஏழாவது நாளான இன்று, பதில் அளித்து பேசிய முதலமைச்சர் , நியாயவிலைக் கடைகள் இல்லாத பகுதிகளில் வீடு வீடாக சென்று இலவச அரிசி வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் 2 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்றார்.