புதுச்சேரி ஆரோவில்லில் ஐஐடி புதிய வளாகம் துவங்கப்பட இருக்கிறது என்று, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார். சென்னை ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், புதுச்சேரி ஆரோவில்லில் ஐஐடி புதிய வளாகத்திற்காக 100 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், அங்கு 3 மாதங்களில் பணிகள் தொடங்கும் என்றும் தெரிவித்தார். மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கான பேட்டரி தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல், சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள 20 ஏக்கர் நிலம் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.