காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-03-2025) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines;
- தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடக்கம்..... 4 ஆயிரத்து 113 மையங்களில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்...
- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிமுகம் செய்த வக்ஃபு சட்டத் திருத்தத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்.... இஸ்லாமிய மக்களின் மத உரிமையை பாதிக்கும் வகையில் உள்ள சட்டத்திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்....
- வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு.. எதிர்ப்பு தெரிவித்து பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது பாஜக..
- தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.... ... திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விழா ஏற்பாடுகள் தயார்.......
- கோவையில் எண்ணெய் நிறுவன அதிகாரிகள் உடனான 2 மணிநேர பேச்சுவார்த்தை தோல்வி... எல்.பி.ஜி. டேங்கர் லாரி ஸ்டிரைக் தொடரும் என்ற அறிவிப்பால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்....
- சென்னை தாம்பரத்தில் பணிமனைக்கு சென்ற விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து... ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு...
- ஈரோடு, சேலம், திருப்பத்தூர் உள்பட 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹிட்டை தாண்டி வறுத்தெடுத்த வெயில்..... வேலூரில் இந்த ஆண்டில் அதிகபட்சமாக 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவு... தமிழகத்தில் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை....
- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு... ஒரு கிராம் 8 ஆயிரத்து 235 ரூபாய்க்கும், சவரன் 65 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை...
- ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்வு... ஒரு கிராம் 8 ஆயிரத்து 235 ரூபாய்க்கும், சவரன் 65 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை...