மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன் - நடப்பது தெரியாமல் வேடிக்கை பார்த்த பிள்ளைகள்
உத்தரபிரதேசத்தில் திரைப்பட பாணியில் தனது மனைவியை அவர் விரும்பிய காதலனுக்கே கணவர் திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சந்த் கபீர் நகர் பப்லு - ராதிகா தம்பதியருக்கு எட்டாண்டு திருமண வாழ்க்கையில் இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவரது மனைவி வேறொருவரை காதலிப்பதை அறிந்த ப்பலு, காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்தார். மேலும், தனது இரண்டு குழந்தைகளின் பொறுப்பை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார்.