நடுரோட்டில் இளைஞரை கொடூரமாக தாக்கி கடத்திய கும்பல் - அதிர வைக்கும் சிசிடிவி

Update: 2025-03-28 02:01 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில், சாலையோரம் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இளைஞரை 2 கார்களில் வந்த மர்ம கும்பல் கொடூரமாக தாக்கி கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. கடத்தப்பட்ட இளைஞரை தேசிய நெடுஞ்சாலையில் விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிய நிலையில், இளைஞரை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கார் மற்றும் கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்