இடம்பெற்றார் பிரியங்கா காந்தி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Update: 2024-12-19 04:12 GMT

இடம்பெற்றார் பிரியங்கா காந்தி.. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து பரிசீலிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் பிரியங்கா காந்தி உள்பட 31 எம்.பி.க்கள் இடம்பெறுகின்றனர்.மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு நாடு ஒரு தேர்தல் மசோதாவை நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டுக்குழுவில் இடம்பெறும் எம்.பி.க்கள் விபரங்களை தருமாறு அரசியல் கட்சிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. பல்வேறு கட்சிகள் தங்கள் எம்.பி.க்கள் பெயர்களை வழங்கின. அதன்படி மக்களவையில் 21 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 10 எம்.பி.க்கள் என 31 எம்.பி.க்கள் கூட்டுக்குழுவில் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் பன்சூரி சுவராஜ், அனுராக் தாக்கூர், சம்பித் பாத்ராவும், காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி, மணிஷ் திவாரியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் கல்யாண் பானர்ஜியும், திமுக சார்பில் செல்வகணபதியும் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் அணி சார்பில் சுப்ரியா சூலே உள்ளிட்ட 21 எம்பிக்கள் மக்களவையில் இருந்து நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெறுகின்றனர். இது தொடர்பான தீர்மானத்தை நாளை மக்களவையில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால் முன்மொழிவார். தீர்மானம் ஏற்கப்பட்டதும் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைக்கப்படும். மாநிலங்களவையிலிருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த 10 எம்.பி.க்களை பரிந்துரைக்கவும் தீர்மானம் முன்மொழியப்படும். 

Tags:    

மேலும் செய்திகள்