சாலையில் நின்ற பேருந்தில் குபு குபுவென கிளம்பிய புகை... ஒரு நொடியில் டிரைவர் செய்த செயல்..
புதுச்சேரி அரசுப்பேருந்தில் திடீரென புகை வந்ததை அடுத்து, ஓட்டுநரின் சாதுர்யத்தால் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.
ஓடைவெளி அரசுப்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த புதுச்சேரி அரசுப்பேருந்தில் தீடீரென புகை வந்தது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர். சாதுர்யமாக செயல்பட்ட பேருந்து ஓட்டுநர் பேட்டரி வயர்களை உடனடியாக கழற்றிவிட்டார். இதனால், தீவிபத்தில் இருந்து பேருந்து தப்பியது.