இந்திய ஜாம்பவானும், தமிழ்நாட்டின் பெருமிதமுமான அஸ்வின் ஓய்வு
2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஓவர் - மறக்கமுடியுமா?
இளம் வயதிலேயே 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்த அஸ்வின், ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதி போட்டியில் வாட்சன், பாண்டிங் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
2012க்கு பிறகு டெஸ்ட்டில் ஜொலிக்க ஆரம்பித்த அஸ்வின், சொந்த மண்ணில் நடைபெறும் தொடர்களில் மேட்ச் வின்னராக உருவெடுத்தார்.
குறிப்பாக 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திடம் டெஸ்ட் தொடரை இழந்ததில் இருந்து, அண்மையில் நியூசிலாந்துக்கு எதிரான மோசமான தொடருக்கு முன்னர் வரை சொந்த மண்ணில் வீறுநடை போட்ட இந்திய அணிக்கு முதுகெலும்பாக இருந்தார்
அஸ்வின் என்றால், 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியை மறக்கமுடியுமா?... கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்படும் போது, தோனியின் நம்பிக்கையை காப்பாற்றியதோடு, பல கோடி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு காரணமானார்...