டொமினிக்கா நாட்டின் மிக உயரிய தேசிய விருதான The Dominica Award of Honour விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அறிவித்துள்ளார்.

Update: 2024-11-14 11:50 GMT

கொரோனாவில் தங்கள் நாட்டிற்கு பிரதமர் மோடி ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், இரு நாடுகள் இடையிலான உறவை மேலும் வலுவாக்குவதில் பிரதமர் மோடியின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையிலும் விருது அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 19 தொடங்கி 21 வரையில் கயானாவில் நடைபெறும் இந்தியா-கேரிகோம் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு டொமினிக்கா அதிபர் சில்வானி பர்டன் விருதை வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 கொரோனா காலத்தில் பிரதமர் மோடி 70 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை டொமினிக்காவிற்கு பரிசாக வழங்கியிருந்தார். சுகாதாரம், கல்வி, தகவல் தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில் டொமினிக்காவிற்கு வழங்கப்படும் இந்தியாவின் ஆதரவை அங்கீகரிக்கும் வகையில் பிரதமர் மோடிக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்