மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக 48 இடங்களில் வைஃபை இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக BSNL அறிவித்துள்ளது. 300 Mbps ஆப்டிகல் ஃபைபர் இணைப்பையும் அமைத்துள்ளது. இது தவிர சபரிமலை வழித்தடத்தில் 4ஜி டவர்களையும் BSNL நிறுவியுள்ளது. தொலைபேசியில் SMS ஆக அனுப்பப்பட்ட 6 இலக்க பின் எண்ணைச் சமர்ப்பித்து BSNL வை பை சேவையை
உடனடியாகப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.