இந்தியாவை பார்த்து பிரமித்த பில்கேட்ஸ்... மோடியை சந்தித்து சொன்ன வார்த்தை
பிரதமர் மோடியும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸும் தொழில்நுட்பம், ஆரோக்கியம், பருவநிலை மாற்றம், சிறுதானியங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடினர்.
அப்போது இந்தோனேசியாவில் நடந்த ஜி-20 மாநாட்டின் போது இந்தியாவில் தொழில் புரட்சியை எப்படி ஏற்படுத்தினீர்கள் என உலக நாடுகள் மிகவும் ஆர்வத்துடன் கேட்டறிந்ததாகத் தெரிவித்த பிரதமர், இந்தியாவில் தொழில் நுட்பத்தை நாங்கள் ஜனநாயக படுத்தியுள்ளோம் என்பதை அவர்களுக்கு புரிய வைத்ததாகக் குறிப்பிட்டார். அப்போது பில்கேட்ஸ் இந்தியாவில் டிஜிட்டல் அரசு இருப்பது போல உள்ளது என்று பாராட்டினார்... மேலும், பிரதமர் மோடி சிறுதானியம் என்பது மிகச் சிறந்த உணவு என்று தெரிவித்ததுடன், சிறுதானிய உணவுகளுக்கு மாறுவது என்பது குறிப்பிடத்தக்க பயன்களை கொடுக்கும் என குறிப்பிட்டார்...