`பிங்க் பால் டெஸ்ட்' போட்டி - இந்திய அணியின் தொடக்க வீரர் யார் தெரியுமா?
`பிங்க் பால் டெஸ்ட்' போட்டி - இந்திய அணியின் தொடக்க வீரர் யார் தெரியுமா?
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பி.ஜி.டி. தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்று முன்னிலை பெற்றது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (இன்று) தொடங்குகிறது. இந்த போட்டி பிங்க் பால் டெஸ்ட் என்று அழைக்கப்படும் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலிய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு தொடங்கி இரவு 9.30 மணி வரை போட்டி நடைபெறும். அதேசமயம் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும் போட்டி மாலை 4.30 மணி வரை நடைபெறும். இதுவரை 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா, மூன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.