வெளிநாட்டில் உள்ள இந்திய சிலைகளை மீட்க `மாஸ்டர் பிளான்’ - சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிரடி

Update: 2023-09-04 05:46 GMT

வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் பழங்கால சிலைகளை எம்.லாட் முறையில் இந்தியா கொண்டு வர நடவடிக்கை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிரடி தனிப்படை போலீசாரால் நடவடிக்கை.

வெளிநாடுகளில் உள்ள பழங்கால சிலைகளை மீட்க கடந்த 13-09-2022 அன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிரடி தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை மூலம் கடந்த 3மாதத்தில் 35 க்கும் மேற்பட்ட பழங்கால இந்திய சிலைகள் வெளிநாடுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட சிலைகளை எம்லாட் - MLAT - ( Mutual Legal Assistance Treaty) - (வெளிநாடுகளோடு இந்தியாவின் பரஸ்பர ஒப்பந்தம் ) முறையில் இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த "சிறப்பு அதிரடி தனிப்படை" மூலம் சிங்கப்பூரில் 16 பழங்கால சிலைகள், அமெரிக்காவில் 8 பழங்கால சிலைகள், ஆஸ்திரேலியாவில் 7 பழங்கால சிலைகள், ஜெர்மனியில் 2 பழங்கால சிலைகள் இருப்பது கண்டுபிடித்துள்ளனர்.

இவற்றுள் பல சிலைகள் பல நூற்றாண்டுகளுக்கு முந்தியது எனவும், பல நூறு ஆண்டுகளுக்கு முந்தைய ஆண்,பெண் தெய்வங்களுக்கான தங்க கவசம் இரண்டு, 200 ஆண்டுகளுக்கு முந்தைய பைபிள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிங்கப்பூரில் சோமாஸ் கந்தன், நடன சம்மந்தர்,நின்ற நிலை விநாயகர், ஹனுமான்.

கருடன்,மயிலம்மன்,

விஷ்னு, முருகர்,

அய்யனார், நின்ற நிலை அம்மன், பல நூறாண்டுகளுக்கு முந்தைய ஆண் பெண் தெய்வங்களுக்கான இரண்டு தங்க கவசங்கள்,ராமானுஜர்,ஸ்ரீதேவி., பூதேவி

உள்ளிட்ட சிங்கப்பூரில் உள்ள 16 சிலைகளும்.,

அமெரிக்காவில்

சிவன் சிலை,

சுந்தரர் சிலை,

பறவை நாச்சியார்,

உள்ளிட்ட எட்டு சிலைகளும் ஆஸ்திரேலியாவில் வெள்ளி செப்பேடு உள்ளிட்ட ஏழு பழங்கால சிலைகள்,

ஜெர்மனியில் உள்ள இருநூறு ஆண்டு கால பைபிள் உள்ளிட்ட 35 க்கும் மேற்பட்ட சிலைகள் மற்றும் புராதண பொருட்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிரடி தனிப்படை கண்டுபிடித்து அவற்றை எம்லாட் முறையில் இந்தியா கொண்டு வரை பரஸ்பர நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது.

எம்லாட் முறையில் வெளிநாடுகளில் உள்ள புராதன சிலைகளை மீட்டெடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிக புராதன சிலைகளை மீட்டு எடுக்கும் நடவடிக்கை முயற்சி இதுவே.

Tags:    

மேலும் செய்திகள்