மன்மோகன் சிங்கின் பொக்கிஷத்தை இன்றும் பாதுகாக்கும் பாக்கிஸ்தான்!

Update: 2025-01-01 15:27 GMT

மன்மோகன் சிங்கின் பொக்கிஷத்தை இன்றும் பாதுகாக்கும் பாக்கிஸ்தான்!

  • மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் Gah கிராமத்தில் அவரது இறப்புக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது...
  • இஸ்லாமாபாத்தில் இருந்து தென்கிழக்கே 100கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் தான் மன்மோகன் சிங் கடந்த 1932ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி பிறந்தார்...
  • அவரது தந்தை குர்முக் சிங் துணி வியாபாரியாகவும், தாய் அம்ரத் கவுர் இல்லத்தரசியாக இங்கு இருந்தனர்...
  • இக்கிராமத்தில் மன்மோகன் சிங் நண்பர்கள் அவரை செல்லமாக மொஹ்னா என்றழைப்பர்... இங்கு மன்மோகன் சிங் படித்த பள்ளி அவரால் சிறப்பு பெற்றுள்ளது...
  • 1937ம் ஆண்டு ஏப்ரல் 17ல் அவர் பள்ளியில் சேர்ந்ததற்கான ஆவணங்கள் இன்றளவு பத்திரமாக உள்ளன...
  • இந்நிலையில், மன்மோகன் சிங் மறைவுக்கு அக்கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்...
Tags:    

மேலும் செய்திகள்