மின்னல் தாக்கி 21 ஆடுகள் பலி...கதறி அழுத குடும்பத்தினர்

x

ஓசூர் அருகே மின்னல் தாக்கி 21 ஆடுகள் இறந்ததால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கதறி அழுதனர். ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவில் பலத்த மழை பெய்தது. அஞ்செட்டி நாட்றாம்பாளையம் என்.புதூர் கிராமத்தை சேர்ந்த பழனியம்மாள் என்பவர், கொட்டகையில் வளர்த்து வந்த 21 ஆடுகள் மின்னல் தாக்கி இறந்தன. அதே கிராமத்தை சேர்ந்த கோவிந்தம்மாள் என்பவர் வளர்த்து வந்த மாடு மின்னல் தாக்கி இறந்தது.


Next Story

மேலும் செய்திகள்