விசாரணைக்கு அழைத்த போலீசாரை தாக்கிய நபர் - வைரலாகும் வீடியோ

Update: 2024-12-29 02:35 GMT

விசாரணைக்கு அழைத்த போலீசாரை தாக்கிய நபர் - வைரலாகும் வீடியோ

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பாண்டவபுராவில் சாகர் என்பவருக்கு நிலம் தொடர்பாக அவரது உறவினர்கள் சிலருடன் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், இது தொடர்பான புகாரில் விசாரணைக்காக சாகர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தார். அப்போது அவர் போலீசார் உடன் சண்டையிட்டதோடு, கண்மூடித்தனமாக சீருடைகள் இருந்த போலீசாரை தாக்கியுள்ளார். பிறகு சக போலீசார் சேர்ந்து அவரை பிடித்து கைது செய்தனர். இதையடுத்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிமன்ற காவலில் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்